கத்தாரில் ஏற்பட்டுள்ள கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் குழுவொன்று கத்தார் இலங்கை தூதரகத்தை நேற்று (07.07.2020) அணுகி அவர்களின் பிரச்சினைகள் குறித்து தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை, கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம், பாதிக்கப்பட்ட இலங்கையர்களை தோஹாவிலிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்ல இரண்டு விமானங்களை ஏற்பாடு செய்ததோடு, தூதரக அதிகாரிகள் கூற்றுப்படி மேலும் விமானங்களுக்கான ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கத்தார் தமிழ்.

