Ads Area

(சவுதியில் வசிப்போருக்கானது ) உங்களது இகாமாவில் எத்தனை சிம்கள் (SIM) பெறப்பட்டுள்ளது என்பதை எப்படி பார்ப்பது..?


தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் தொழில் நிமிர்த்தம் பணிபுரியும் மற்றும் வசிப்போர் தங்களது இகாமாவில் (Iqama - Saudi Resident ID card) எத்தனை சிம்காட்கள் பெறப்பட்டு்ள்ளது என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். உங்களது இகாமா தொலைந்தாலோ, அல்லது திருடப்பட்டிருந்தாலோ, அல்லது பிறரால் நகல் எடுக்கப்பட்டிருந்தாலோ அதனைக் வைத்து உங்களது பெயரிலேயே அவர்கள் சிம்காட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறு உங்களது இகாமாவின் மூலமாக பிறர் சிம்காட்களை பெற்று அவர்கள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபடும் போது சவுதி அரேபியா பொலிஸாரினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், அவர்களது குற்றத்திற்கும் நீங்களே பொறுப்புதாரியுமாவீர்கள்.

ஆகவே இது விடையத்தில் கவனமாக இருந்து உங்களது இகாமாவில் எத்தனை சிம்காட்கள் பெறப்பட்டுள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்ட சிம்காட்களைத் தவிர வேறு ஏதாவது இலக்கங்கள் உங்கள் பெயரில் இருந்தால் அது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு அளித்து நீக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் இகாமாவில் எத்தனை சிம்காட்கள் பெறப்பட்டுள்ளது என்பதை எப்படி பார்ப்பது..??

இதற்கு முதலில் https://portalservices.citc.gov.sa என்ற இந்த லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்து ஓபன் ஆகும் பக்கத்தில் அரபு மொழி தென்பட்டால் அதில் உள்ள English என்பதை தெரிவு செய்து ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளலாம். பின்னர் அதில் கேட்கப்படும் ID Number எனுமிடத்தில் உங்களது இகாமா நம்பரை வழங்க வேண்டும் அதே போல் Mobile Number எனும் இடத்தில் உங்களது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தினை வழங்க வேண்டும், நீங்கள் எந்த தொலைபேசியும் பாவிக்காது விட்டால் பக்கத்தில் இருக்கும் I do not have mobile number என்பதை கிளிக் செய்து கொள்ளலாம்.



உங்கள் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்து விட்டு பக்கத்தில் தென்படும் குறியீடுகளை பிழையில்லாமல் கொடுத்து விட்டு Search என்பதை கிளிக் செய்யுங்கள். Search என்பதை கிளிக் செய்தவுடன் உங்களது தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு மெசேச் அனுப்பப்படும் அந்த மெசேச்சில் உள்ள 4 இலக்கங்களை Please enter the verficiation code sent to your mobile எனும் இடத்தில் கொடுத்து விட்டு Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும் அவ்வளவுதான் உங்களது இகாமாவில் எத்தனை சிம்காட்கள் பெறப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படத்தில் காண்பித்திருப்பது போல் காண்பிக்கும்.


இதில் நீங்கள் பாவிக்காத, உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்ளாத ஏதாவது தொலைபேசி இலக்கம் காணப்பட்டால் கீழே தரப்படும் இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி முறையிட்டு அதனை நீக்கிக் கொள்ளலாம்.

STC : 900

Mobily : 1100

Zain : 959

Friendi : 166000

Virgin : 1789

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe