சகோ. அதாவுல்லாவினாலும் ஆதரவாளர்களினாலும் திட்டமிடப்பட்டு - நேற்றிரவு உடைக்கப்பட்ட எனது வாகனம் எனக்கு பெரிதல்ல. அவர்களின் கோட்டை என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்குமிடத்தில் - கூட்டம் நடத்தும் போது - இதையெல்லாம் சந்திப்பது பற்றி எனக்கு சிறிதளவும் சஞ்சலம் கிடையாது. கூட்டத்தை நடாத்தி முடிப்பதிலேயே கவனமாக இருந்தோம். நடாத்தி சலவாத்துடன் முடித்துவிட்டே வந்தோம்.
இதற்கு முன்னரும் இது போன்று நான் சந்தித்திருக்கிறேன். எனது மனைவியும் பிள்ளைகளும் உறங்கும் போது - நள்ளிரவில் எனது வீட்டிற்கு குண்டடித்ததைப் போன்ற பொண்ணைத்தனத்தை - மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். இதுதான் இவர்களுடைய அசில்.
அதிகாரமும் பதவியும் மக்களை அச்சுறுத்தும் கருவிகளல்ல. மாறாக, மக்களுக்கு அவை அமைதிக்கான மூலங்களாக இருக்க வேண்டும் என்பதை திடமாக நம்புபவன் நான். ஆனால், சகோ. அதாவுல்லா இத்தனை வயதிலும் அனுபவத்திலும் இதனை கற்றுக்கொள்ளாதது - அவரின் அளவு கடந்த அதிகார மற்றும் பதவி மோகத்தின் உச்சத்தையே காட்டுகிறது.
நானும் வன்முறையை கையில் எடுக்க சில கணங்களே எடுக்கும். ஆனால், மக்களின் நிம்மதியும் அமைதியும்தான் அதில் தொலைந்துபோகும். ஜனநாயக உரிமைகளை வன்முறைகொண்டு அபகரிப்பதை - தர்மத்தின் வழியில் நியாயப்படுத்த முடியாதது.
இன்ஷா அல்லாஹ்.... இந்த முறையும் அது நடக்கும். தோல்வியும் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்
- ஏ.எல்.தவம் -