Ads Area

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள்-நோயாளிகள் ஏன் பச்சை நிற உடை அணிகிறார்கள்..?

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள்-நோயாளிகள் ஏன் பச்சை நிற உடை அணிகிறார்கள்..?

மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் பச்சை நிற துணியை தொங்கவிட்டுள்ளார்களே? ஏன் தெரியுமா? அதுமட்டுமல்லாது மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போதும் பச்சை நிற உடையையே அணிகிறார்கள். அதே போல் நோயாளிகளுக்கும் அதே நிற ஆடை கொடுக்கப்படுகிறதே? ஏன் தெரியுமா?

1900 களின் ஆரம்பத்தில் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறமே பயன்படுத்தப்பட்டது. பின்னரே பச்சை நிறம் பயன்படுத்தப்பட்டது. திடீரென மருத்துவ துறையில் ஏன் இந்த மாற்றம் என தெரிந்துகொள்ள வேணுமா? அதற்கு முன் உங்களுக்கு ஒரு பரீட்சை!

சிவப்பு நிறத்தை ஒரு நிமிடம் உற்று பாருங்கள் பின்னர் உடனே வெள்ளை நிறத்தை பாருங்கள். இப்போது அந்த வெள்ளை நிறத்தில் பச்சை நிறம் தெரிகிறதா? நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தொடர்ந்து சிவப்பு நிறத்தையே பார்த்து கொண்டிருக்கும் போது, மூளையில் உள்ள வண்ணத்தை வேறுபடுத்தி காட்டும் கூம்பு செல்கள் உணர்விழக்க நேரிடும். இறுதியில் சிவப்பு நிறத்தை அடையாளம் காண்பதே அரிதாகிவிடும். இதனால் தோலிற்கு இரத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தவறு செய்ய நேரிடலாம்.

இப்போது இவர்களை சுற்றி வெள்ளை நிறம் இருக்கும் போது, இரத்தத்தை பார்த்துவிட்டு வெள்ளைநிற பின்னணியை பார்க்கையில் மீண்டும் நோயாளியின் உறுப்பை காணும்போது அது பச்சை நிறமாக தெரிந்துள்ளது. மீண்டும் குழப்பம்!

இந்த குழப்பத்தை தவிர்க்க அறுவை சிகிச்சை அறையின் சுற்றுப்புறத்தில் பச்சை நிறத்தை பயன்படுத்தும் போது, எந்தவித குழப்பமும் எழாமல் இருந்துள்ளது. மேலும் இந்த நிறம் வண்ணத்தை ஏற்படுத்தும் கண்களின் கூம்பு செல்களை பாதிக்காத காரணத்தால் தொடர்ந்து இந்த நிறத்தையே பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் வைத்தியர்கள்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் போது அதிக நேரம் கண்களை திறந்து உற்றுப் பார்த்து அறுவைக் சிகிச்சை செய்யும் போது அவர்களது கண்கள் களைப்பாக ஆகும் அவ்வாறு களைப்பாகும் போது அவர்கள் உடனே பச்சை நிறங்களைப் பார்த்தால் அது கண்களுக்கு குளிச்சியைக் கொடுக்கும் இதனாலும் பச்சை நிற ஆடைகளை அவர்கள் அணிந்திருக்கின்றார்கள், பலர் நீல நிற ஆடைகளையும் அணிவதுண்டு.

இயற்கைக் காட்சிகளை, பச்சை நிறப் புல் வெளிகளைப் பார்வையிடும் போது நமது மனதிற்குல் ஒரு உற்சாகம் கண்களுக்கு ஒரு குளிர்ச்சி கிடைக்கின்றதல்லவா அவ்வாறுதான் இதுவும்.

மேலும் பச்சை நிறம் என்பது இயற்கை நிறம், இதனை பார்க்கும் போது மனதிற்க்கு அமைதி கிடைப்பதாலே மருத்துவமனையில் பச்சை சுற்றத்தை உருவாக்கினார்கள். சிறுவயதில் ஊசிபோட போகும்போது, செவிலியர் ஒருவர் பச்சை நிறத்தை பார் வலி தெரியாது என கூறியது விளையாட்டிற்கு அல்ல என இப்போது புரிகிறது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe