கொரோனா வைரஸ் தொற்று குறித்த உண்மையான நிலைமைகளை அரசாங்கம் மறைப்பதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் நலனுக்காக நாடு மீண்டும் வழமைக்கு திரும்பி விட்டது என்று காண்பிப்பதற்காகவே, அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும், கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை அரசாங்கம் மறைத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ள போதும் இந்த முடிவின் பின்னணியில் உள்ள உண்மையை அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்தியமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.