Ads Area

வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம், கிளை அலுவலகம் திறப்பு, கருத்தரங்குகளால் களைகட்டும் அம்பாறை அரசியல் களம்!

நூருல் ஹுதா உமர்  

2020 பொதுத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சார பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ரிஸ்லி முஸ்தபா போன்றோர்களின் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சார பணி கடந்த சில நாட்களாக மாளிகைக்காடு சாய்ந்தமருது பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. 

அத்துடன் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளர்களான றிசாத் ஷரிஃப், சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், சட்டத்தரணி கே.எல்.சமீம், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.சி. பைசல் காசிம், ஏ.எல்.எம். தவம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஷாரப், கே.எம். ஜவாத், போன்றோர்களும் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சார பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன்போது, வேட்பாளர்களுக்கு பொதுமக்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துக்களும் பரிமாறப்பட்டன.

அத்துடன் சகல அரசியல் கட்சிகளும் மகளிர் கருத்தரங்கு, இளைஞர் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அரசியல் செயற்பட்டு கிளை அலுவலக திறப்புக்கள் என மும்முரமாக அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் உட்கட்சி போட்டிகள், விருப்புவாக்கு சண்டைகள் எதிரணியுடனான முரண்பாடுகள் தேர்தல் வன்முறைகள், சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளும் ஆங்காங்கே பரவலாக நடைபெற்றும் வருகிறது. 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe