Ads Area

சவூதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய ஒட்டக வைத்தியசாலை திறப்பு...!


உலகின் மிகப் பெரிய ஒட்டக வைத்தியசாலை சவுதி அரேபியாவின் புரைதா (BURAIDAH) பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அல்-கசீம் (Qassim) பிரதேச அமீர் Dr. பைசல் பின் மிசால் பின் சவூத் (Dr. Faisal Bin Mishal Bin Saud ) அவர்களினால் இந்த வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.



ஒட்டகங்களின் இனவிருத்தியை அதிகப்படுத்துல், அவைகளின் நோய்களை குணப்படுத்துதல், நோய்களை கண்டறிதல் போன்ற பல்வேறு சேவைகள் இங்கு வழங்கப்படவிருக்கின்றன. இவ் வைத்தியசாலையானது ஒட்ட உரிமையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது.

இவ் வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடங்களில் 60க்கு மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் 160 க்கு மேற்பட்ட பகுப்பாய்வு நிலையங்கள் உள்ளன. மேலும் இவ் வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 144 ஒட்டகங்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய ஒரு பிரமாண்ட சிகிச்சை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ் வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 4000 ஓட்டகங்களை தங்க வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 மி்ல்லியனுக்கு அதிகமான செலவில் 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இவ் வைத்தியசாலையில்  ICU பிரிவு, சத்திரகிசிச்சைப் பிரிவு, ஸ்கேன் பிரிவு என பல மருத்துவ வசதிகளும் உள்ளன.

இவ் வைத்தியசாலையின் மூலம் ஒட்டகங்களில் இனவிருத்தியை 100 இருந்து 700 வரை உயர்த்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe