இந்த முறை சர்வதேச யாத்திகர்களுக்கான ஹஜ் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கவலை எல்லோரையும் ஆட்கொண்டிருக்கிறது. சவூதி அரேபியா தனது நாட்டவர்களுக்கும், நாட்டிலுள்ள வெளி நாட்டவர்களுக்கும் மாத்திரமே இந்த வருடம் ஹஜ் செய்வதற்கான அனுமதியை அளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த சர்வதேச ஹஜ் தற்காலிகத் தடை பல்வேறு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் இது தான் உலக வரலாற்றில் முதல் முறை நடைபெறுவது போன்றும், அதனால் இது உலகம் அழிவதற்கான ஒரு பெரும் அடையாளம் போன்றும் இதை விமர்சனம் செய்ய துவங்கியிருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்னரும் இஸ்லாமிய வரலாற்றில் ஹஜ் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நாற்பது தடவைகள் நிகழ்ந்தே இருக்கின்றன.
இந்த சர்வதேச ஹஜ் தற்காலிகத் தடை பல்வேறு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் இது தான் உலக வரலாற்றில் முதல் முறை நடைபெறுவது போன்றும், அதனால் இது உலகம் அழிவதற்கான ஒரு பெரும் அடையாளம் போன்றும் இதை விமர்சனம் செய்ய துவங்கியிருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்னரும் இஸ்லாமிய வரலாற்றில் ஹஜ் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நாற்பது தடவைகள் நிகழ்ந்தே இருக்கின்றன.
வரலாற்றில் ஹஜ் இடை நிறுத்தப்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தி இருக்கின்றன. தொற்று நோய்கள் / நோய்களின் பரவுகை , அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார மந்தம், பயணப் பாதுகாப்பின் உறுதியற்ற தன்மை, மோதல்கள், யுத்தங்கள் கொள்ளைக்காரர்கள் மற்றும் ரவுடிகளின் செயல்பாடுகள் இவற்றுள் பிரதான காரணமாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் வரலாற்றில் ஹஜ் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பத்து சந்தர்ப்பங்கள் கீழே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1. ஹிஜ்ரி 251 / கி.பி 865 :
அல் சஃபாக் என்று அழைக்கப்படும் இஸ்மாயில் பின் யூசுப் அல்-அலவி மற்றும் அவரது படைகள் அப்பாஸிய கலிபாவுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை வழி நடத்தியதுடன், மக்காவிற்கு அருகிலுள்ள அராபத் மலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை படுகொலை செய்தனர், இதனால் அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது.
2. ஹிஜ்ரி 317 / கி.பி 930:
3. ஹிஜ்ரி 357 / கி.பி 968:
மக்காவில் “அல்-மஷிரி” எனப்படும் ஒரு நோய் பரவல் காரணமாக அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது. இந்த நோய் காரணமாக யாத்ரீகர்கள் பலர் இறந்து போனார்கள். அவர்களின் ஒட்டகங்கள் தாகத்தினால் வழியில் இறந்தன.
4.ஹிஜ்ரி 390 மற்றும் 419/ கி.பி 1000 & 1028/
அதிக பொருட் செலவு மற்றும் பணவீக்கம் காரணமாக ஹஜ் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதே காரணத்திற்காக ஹிஜ்ரி 419 இல் கிழக்கிலிருந்தும், எகிப்திலிருந்தும் யாரும் ஹஜ் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. ஹிஜ்ரி 492 / கி.பி 1099:
6. ஹிஜ்ரி 654 / கி.பி 1256:
ஹிஜாஸ் மாகாணம் (மக்கா மதீனா உட்பட்ட பிரதேசம்) தவிர வேறு எந்த நாட்டவர்களும் நான்கு ஆண்டுகளாக ஹஜ் செய்ய வரவில்லை.
7. ஹிஜ்ரி 1213 / கி.பி 1799:
போக்குவரத்து வழிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் பிரெஞ்சு புரட்சியின் போது ஹஜ் பயணங்கள் நிறுத்தப்பட்டன.
8. ஹிஜ்ரி1246 / கி.பி1831:
இந்தியாவில் இருந்து வந்த ஒரு வகை பிளேக் பரவலினால், முக்கால்வாசி ஹஜ் யாத்ரீகர்கள் இறந்து போயினர் . அதன்காரணமாக அந்த ஆண்டும் ஹஜ் தடைபடுத்தப்பட்டது
9. ஹிஜ்ரி 1252 - 1310/கி.பி 1837 -1892
இந்த ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் தொற்றுநோய்கள் பரவியிருந்தன. 1871 இல் அது மதீனாவையும் தாக்கியது. இந்த காலரா தொற்று ஹஜ் காலத்தில் பரவியது இதனால் ஏனெனில் அராபத்தில் பெருமளவில் மரணங்கள் நிகழ்ந்தன அவை மினாவில் அதிகரித்த எண்ணிக்கையை அடைந்தன. என் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையினரே ஹஜ் கடமையில் ஈடுபட்டனர்.
10. ஹிஜ்ரி 1441 / கி.பி 2020
கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) ஹஜ் நிகழ்வு சர்வதேச யாத்ரீகர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆக இது தான் உலகின் முதல் முறை உலகில் ஹஜ் நிறுத்தப்படுகிறது என்பது எல்லாம் வெறும் வரலாறு தெரியாத பிதற்றல்கள் தான். இதற்கு முன்னரும் பல தடவைகள் ஹஜ் தடை செய்யப்பட்டிருக்கின்றது. சில சமயங்களில் நடைபெறாமலே போயிருக்கிறது.
இறைவன் மட்டுமே நித்தியமானவன் அவனே புனிதமானவன்.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை.
தகவல் மூலம்- ஹறமைன் பக்கம்.