(காரைதீவு நிருபர் சகா)
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட சம்மாந்துறைக் கோட்டத்திலுள்ள மல்வத்தை விபுலாநந்தா மகா வித்தியாலயத்திற்கு அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம் ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதியை வழங்கிவைத்தது.
வித்தியாலயஅதிபர் திருமதி கௌசல்யா கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியத்தின் பிரதிநிதியும் வலயக்கல்விப்பணிமனை பிரதிநிதியுமாகிய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பாடசாலையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம் பின்தங்கிய 40 பாடசாலைகளுக்கு ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதிகளை வழங்கிவருவது தெரிந்ததே.