மட்டக்களப்பில் விகாரை அமைக்க வந்த பௌத்த பிக்குவை விரட்டியடித்த பொதுமக்கள் (Video)
Makkal Nanban Ansar6.7.20
மட்டக்களப்பு வெல்லாவெளி வேற்றுச் சேனை எல்லைக் கிராமத்தில் விகாரை அமைக்கவென்று வந்த பௌத்த பிக்குகளை இளைஞர்கள் விரட்டி அடித்துள்ள சம்பவம் சற்று முன் நடைபெற்றுள்ளது.
வெல்லாவெளி வேற்றுச் சேனை கிராமம் தொல்பொருள் ஆராட்சி இடமாக இனங்காணப்பட்டதாகக் கூறி பௌத்த பிக்குகள் சிலரும், சிங்கள இளைஞர்களும், காவல்துறையினரும், சில அதிகாரிகளும் அந்த இடத்திற்கு வருகைதந்தபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு அவர்களை அங்கிருந்து அகற்றியுள்ளார்கள்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பிரதேசத்தில பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.