தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் மனிதர்களின் குணங்கள், நடவடிக்கையே மாறிவிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பெற்ற தாயை, கொரோனா பாதிப்பு காரணமாக பேருந்து நிலையத்திலேயே அவரது மகன் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம் மாச்சர்லா என்ற நகரின் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது தனக்கு செய்து கொண்ட கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.