தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி ஜெயப்ரியா என்பவரை 3 காமக் கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அடித்தே கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பாலியல் பலாத்காரம் செய்பவர்களை உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தமிழகம் இந்த சட்டத்தை இயற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், ரேப் செய்தால் உடனடியாக மரண தண்டனை என்ற சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.