(பைஷல் இஸ்மாயில்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் 21 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொற்றுநோய் பாதுகாப்பு அங்கிகள் (Protective Coverall) இன்று (25) கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீலினால் வழங்கி வைக்கப்பட்டது.
வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸ் மற்றும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் ஆகியோரினால் இப்பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.



