தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தமாக வருகை தந்துள்ள லட்சக்கணக்கான பணியாளர்கள் தமது தாயகம் நோக்கி பயணம் செய்யும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இலங்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு உத்தேசித்துள்ள பணியாளர்கள் 4450SAR (சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் கட்டணம் தவிர்த்து) சிறீ லங்கன் எயார் லைன்ஸுக்கு செலுத்துமாறு வேண்டியுள்ளது. செலுத்தும் தொகையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
01. ஒருவழிப் பயண விமான டிக்கெட்
02. 3 ஸ்டார் ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்
03. PCR(2) பரிசோதனை
04. விமான நிலையத்திலிருந்து தங்குமிட ஹோட்டல் வரை போக்குவரத்து வசதி
Thanks - Hatheek


