நூருல் ஹுதா உமர்
தேசிய காங்கிரசின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் குதிரை சின்னத்தில் போட்டியிட்டு 38911 வாக்குகளை பெற்றதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இழந்த தேசிய காங்கிரசின் ஆசனம் இம்முறை மீண்டும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு கிடைக்கப்பெற்றது எனும் சந்தோசத்தை கொண்டாடும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தேர்தல் பெறுபேறுகள் வெளிவந்த தினம் முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அங்கு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய காங்கிரசின் ஆதரவாளர்களும், முக்கியஸ்தர்களும் வீதியால் சென்ற மக்களுக்கு பால்சோறு மற்றும் தாகசாந்திகள் வழங்கி தமது மகிழ்ச்சியை கொண்டாடினர்.