Ads Area

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றினுல் புகுந்து பட்டப்பகலில் நகைகளை திருடியவர் கைது.

(பாறுக் ஷிஹான்)

பட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அத்துமீறி உட்புகுந்து 8.8.2020 அன்று 2 அரை பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த தகவலுக்கு அமைய கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜயசுந்தரவின் கட்டளைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் துரைசிங்கம் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் 30 வயதுடைய சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு கைதானவரிடம் இருந்து களவாடப்பட்ட தங்க நகைகள் மற்றும் களவாடிய பொருளினை விற்ற பணத்தில் வாங்கிய கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் யாவும் ரூபா 2 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியை உடையதாகவும் நாளை (10) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த நகைகள் பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe