மட்டக்களப்பு பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.
குறித்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்பதுடன் எமது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்ந்தும் கொரோனா சிகிச்சை நிலையமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதனை உங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.
எனது உத்தியோகபூர்வ முகநூல் அல்லாது வேறு தளங்களில் பகிரப்படும் இவ்வாறான உறுதிப்படுத்தபடாத தகவல்களை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்கள் அன்புச் சகோதரன்
கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ்
(முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்)