தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கும் சர்வதேச விமான போக்குவரத்துச் சேவைகள் திறக்கப்பட்டு மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலாவுகின்றது இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான போலியான செய்தியாகும் என சவுதி அரேபியா விமானப் போக்குவரத்து ஆணையகம் (The General Authority of Civil Aviation (GACA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இதே போன்ற மற்றுமொரு போலிச் செய்தியும் அதாவது ஆகஸ்ட் 01ம் திகதி சர்வதேச விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாகவும் சமூகவ வலைத்தளங்கள் வாயிலாக போலிச் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலைக் கட்டுப்படுத்த சவுதி அரேபியா கடந்த மார்ச் 15ம் திகதியளவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக தடை செய்திருந்தது, இந்தத் தடை இன்னும் அமுலிலேயே இருந்து வருகின்றது இருந்த போதும் விசேட காரணங்களுக்காக மாத்திரம் சில விசேட விமான சேவைகள் இயங்கி வருகின்றதே தவிர முற்று முழுதாக சர்வதேச விமான சேவைகளுக்கான தடை நீக்கப்படவில்லை.