Ads Area

கிழக்கு வரலாற்றில் சம்மாந்துறை வைத்தியசாலையில் இடம் பெற்ற முதலாவது விசேட சத்திர சிகிச்சை.

கிழக்கிலங்கையில் முதலாவது சத்திரசிகிச்சை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலே!

Laparoscopic burch Colposuspension.

பெண்களுக்கு வரும் பிரச்சினைகளில் ஒன்றுதான் சிரித்தால் கதைத்தால் இருமினால் தங்களது கட்டுபாடின்றி தங்களுக்கு தெரியாமல் தங்களின் விருப்பமின்றி சிறு நீர் வெளியாவதாகும். இது வெளியே சொல்ல முடியாத பெரிய பிரச்சினையாகும். சிறு நீர்ப்பையின் கழுத்து அதன் நிலைவிட்டு கீழே இறங்கிக் காணப்படுவதாலே இப்பிரச்சினை ஏற்படுகின்றது.

இதற்கான சத்திர சிகிச்சை முறைகள் மூன்று வகைப்படும்.

1) வெளிப்புறமாக சிறு நீர்ப்பையை மேலே தூக்கி அதன் நிலையைப் பேணுவது (TOT/TVT). இதன் போது இரத்தம் உறைதல் ( Hematology) , தொடர்ச்சியான இடுப்பு வலி (chronic pelvic pain) பெண்குறியில் காயங்கள் ஏற்படலாம். ( Vaginal erosion)

2) வயிற்றை வெட்டி வயிற்றினூடாக செய்யப்படும் சத்திர சிகிச்சை
Open Burch Colposuspension.

இதன்போது அதிக சிறு சிறு இரத்தக் குழாய்களைக் கொண்ட சிறு பகுதியை ( Potential space) கையாளுவதால் இரத்தப் பெருக்குடன் இரத்தம் உறைதல் ஏற்படலாம் ( Hematology ).

3) கமரா மூலம் செய்யும் சத்திர சிகிச்சை. இதை Laparoscopic Burch Colposuspension என்பார்கள். நவீன மயமாகும் மருத்துவ துறையில் நன்மைகள் கூடிய சத்திரசிகிச்சை நடைபெறுவது சிறந்த சேவையைக் குறிக்கும். மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு முறைகளிலும் ஏற்பட்ட பிரதி கூலங்களற்ற கண்ணால் பார்த்து செய்யப்படும் சத்திர சிகிச்சைதான் இது. இவ்வகையான சத்திரசிகிச்சையை இலங்கையில் Laparoscopy மூலம் செய்பவர்கள் ஒரு சிலரேயாகும்.

கிழக்கிலங்கையில் இச் சத்திர சிகிச்சையானது முதன் முதலாவதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் Dr. Mohammed Musthaq VOG அவர்களால் அதிலும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இருக்கின்ற குறைந்தளவான வளங்களைக் கொண்டு  மிகவும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

Laparoscopy மூலம் பல பெறுமதியான பெண்ணியல் சத்திர சிகிச்சைகளை நோயாளிகளின் நன்மைக்காக செய்து வருவது மிகவும் சிறந்த சேவைகளாகும்.

Laparoscope மூலம் இவ்வாறான அநுகூலமான சத்திரசிகிச்சை செய்வதற்கு பல உபகரணங்கள் தேவைப்படுவதால் இதை மக்களின் கவனத்தில் விடுகின்றோம்.

இச்சத்திர சிகிச்சைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சிறந்த சேவையே எமக்குத் தேவை.

தகவலுக்கு நன்றி - Base Hospital Sammanthurai







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe