சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்மாயில்புர மஸ்ஜிதுல் தௌவ்ர் பள்ளிவாசலின் மிக நீண்டகாலத் தேவையாகவிருந்த தரை ஓடுகள் (மாபுல்) பதிக்கும் வேலைத்திட்டற்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு அண்மையில் மஸ்ஜிதுல் தௌவ்ர் பள்ளிவாசலில் அண்மையில் இடம் பெற்றது.
மஸ்ஜிதுல் தௌவ்ர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தரும் பல சமூக வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருபவருமான வை.பி.எம். அஸ்மி யாசீன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அவரினால் இதற்கான நிதி உதவி பெற்றுக் கொடுக்கப்பட்டு அதற்கான காசோலை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்திற்கு கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் அஸ்மல் அலி ஹாஜியார் அவர்களிடம் வை.பி.எம். அஸ்மி அவர்கள் முன்வைத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வர்த்தகர் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில், இஸ்மாயில்புர மஸ்ஜிதுல் தௌவ்ர் பள்ளிவாசல் தலைவர், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டதோடு, இவ் வேலைத்திட்டம் வெற்றி பெற முயற்சி செய்து, நிதியுதவியினைப் பெற்றுக் கொடுத்த வை.பி.எம். அஸ்மி அவர்களுக்கும் நிர்வாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்தனர்.








