சம்மாந்துறையின் அரசியல் நிலைமை 2010 இற்கு பின்னர் இழுபறியில் சிக்கிய இயாலாமையாகியுள்ளமையை யாராலும் மறுக்க முடியாது.
இனியும் இந்த ஊர் 'அரசியல் கெசினோ' ஆகி விடக்கூடாது.
நமது பிரதிநிதித்துவங்கள் திடமாகப்பட வேண்டும்.
இது ஊர்வாதமுமல்ல, பிரதேசவாதமுமல்ல.
தாய்மண் மீதான தனித்துவ பற்றுடன் வரைகின்ற கட்டுரை இது!
கடந்த பிரதே சபைத் தேர்தலில் அதிகப்படியாக சம்மாந்துறை மக்கள் அ.இ.ம.க. வுக்கு வாக்குகளால் அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.
சரி, இதன் உயிர்நாடி என்னவென்றால் நௌஷாத் எனும் ஒரு தனிபரையும் இணைத்த வாக்கு வங்கியை சுபீகரித்த அ.இ.ம.கா. வுக்கு நௌஷாத் அன்று இனிப்பு. இன்று புளிப்பு.
கட்சித் தலைவர் றிஷாதின் சுய இன்ப சுவாரசியங்களுக்கு சம்மாந்துறை மக்களின் ஆணை ஒன்றும் பகடக்காயல்ல.
ஜனநாயக ரீதியில் மக்கள் நிலைகொண்டு; உரித்து கொடுத்த தவிசாளர் கதிரை இன்று கூறுபோடுபடுவதற்கு இந்த ஊர் ஒன்றும் ".........வெற்றிலைப் பொட்டியல்ல"
இங்கு மாஹிர், நௌஷாத் என்பது ஒரு பேசு பொருளல்ல.
இருவரையும் ஒப்பீட்டளவில் விமர்சிக்கும் நேரமுமல்ல இது!
மாஹிரும் தகுதியானவர்தான் இருந்த போதிலும், மக்கள் அ.இ.ம.கா.வுக்கு கொடுத்த இறைமையின் பெறுமதி என்ன?
இவ்வாறு கட்சி முடிவில் தவிசாளரை மாற்றுவதானால் மக்களின் உரிமைக்கு என்ன பொருள்?
இவை ஒருபுறமிருக்க விடயத்துக்குள் வருவோம்;
தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தவிசாளர் நௌஷாத் 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரே தவிர' அவரை சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க அ.இ.ம.காவுக்கு உரித்தில்லை.
இது விடயமாக சற்று முன்னார் சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவருடன் உரையாடினேன்.
அதில் அவர் கூறியதாவது,
"உள்ளூராட்சி மன்ற சபைகளின் சட்டத்தின் பிரகாரம் ஒருவர் வெளிப்படையாக கட்சி மாறி கட்சிக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருக்குமானால் மாத்திரமே உறுப்புரிமையை இரத்துச் செய்யலாம்.
அவ்வாறு பார்த்தால் உறுப்பினர் அஸ்பர் இன்னொரு கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்.
ஆனால் நௌஷாத் அப்படி அ.இ.ம.கா.விற்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை.
தேர்தல் காலத்தில் மேடை போட்டார். ஆனால் அதில் அவர் அ.இ.ம.கா. வை 100% ஆதரித்து பேசவில்லை. அதற்காக அ.இ.ம.கா. வை எதிர்த்தும் பேசவில்லை.
எனவே, கட்சித் தலைமை சொந்த விருப்பு, வெறுப்புக்காக சபை உறுப்பினர் உறுப்புரிமையை பறித்துவிட எந்த விதத்திலும் சட்டத்தில் இடமில்லை - என்றார்.
இக் கூற்றின் பிரகாரம் நோக்கினால் அஸ்பர், சியாமாவிற்கு இல்லாத சட்டம் நௌஷாதின் மேல் பாயுதாமென்றால் அது கட்சியினுடைய, அதன் தலைமையுடைய இயலாமையின் வெளிப்பாடு.
அ.இ.மா.கா.வுக்கு மக்கள் கொடுத்த ஆணை வெறுமெனே கட்சிக்கானதல்ல.
வீரமுனை வட்டராத்தில் அமோக வெற்றியை சுழற்றிய நௌஷாதின் பங்கு மிகவும் இன்றியமையாதவை.
உணர்வு ரீதியில் பார்த்தால் அ.இ.ம.கா. சம்மாந்துறை தவிசாளர் கதிரைக்கு வைக்கின்ற ஆப்பு இந்த ஊருக்கு வைக்கின்ற ஆப்பாகும்.
அது எவ்வாறென்றால் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் மாஹிரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் எமதூரின் சிலர் கட்சித் தலைவர் கொடுத்த 'கப்பில்' இரண்டாக பிளந்து முஷர்ரப் இற்கு பெருவாரியாக செயலுருவம் கொடுக்கச் செய்தனர்.
அந்த விஷத்தை மறைக்க இன்று தவிசாளரை கதிரைய சுழற்றி மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை மழுப்ப முனைகின்றனர்.
நாம் தெளிவுபெற வேண்டிய தருணமிது; பொதுத் தேர்தலில் பலரது 'இண்வெஸ்ட்மன்ட்'களும் சம்மாந்துறைக்கே உள்நுழைந்தது.
இப்போது தவிசாளர் கதிரையையும் பாழாக்கினால் 40 ஆயிரத்திற்கும் அதிகமான படித்தோர் பலரையும் சுமந்த இந்த மண்ணுக்கு பக்குமில்லாத அரசியல்வாதிகள் செய்யும் பெரும் துரோகங்கள் வரலாற்று மூலதனமாகிவிடும்.
அவ்வாறு தவிசாளரை மாற்றுவதானால் இந்த முடிவின் பின்னனியில் ஊர் நிர்வாகங்கள் உள்வாங்கப்பட்டு பொதுப்படையக அலசலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
இவ்வளவு பெரிய ஊரின் மக்கள் ஆணையை கொழும்பிலிருந்து கொண்டு ஒரு கட்சியின் தலைவர் துஸ்பிரயோகம் செய்வது ஜனநாயகமல்ல.
✍️ கியாஸ் ஏ. புஹாரி

