9ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கன்னி அமர்வுக்கு செல்வதற்கு முன்னர், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று (20) காலை கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசலில் கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு சென்று அன்னாருக்காக விசேட துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.




