குவைத்தில் நாளை முதல் டேக்ஸியில் 3 பேர் செல்ல அனுமதி : குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..
குவைத்தில் நாளை முதல் ஒரே நேரத்தில் 3 பயணிகளை டாக்சிகளில் பயணிக்க அனுமதிக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது ஒரே நேரத்தில் ஒரு பயணிகள் மட்டுமே டாக்சிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். டேக்ஸி உரிமையாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் ஒரு பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் டாக்ஸி சேவைகளை இயக்க கடந்த வாரம் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

