(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையில் 38 வருடங்களாக அலுவலக உதவியாளராக கடமையாற்றி ஓய்வுபெற்று செல்லும் ஏ.எல்.அலியாரிற்கான பிரியாவிடை வைபவமும் கௌரவிப்பும் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், பிரதேச சபையின் நிதி உதவியாளர் ஏ.ஜே.எம்.ஜெஸீல் தொழில்நூட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.