முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

