Ads Area

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த நாஸீர் அலி நியமனம்.

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த நாஸீர் அலி (SLEAS, Bsc- Uoj, PGDEA ) நியமனம் பெற்றுள்ளார்.

மல்வானை அல்/முபாறக் தேசிய பாடசாலையில் கடந்த 2 வருடம் 10 மாதங்களாக பிரதி அதிபராக கடமை புரிந்த நாஸீர் அலி அவர்கள் தற்போது இடமாற்றம் பெற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைபற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட நாஸீர் அலி அவர்கள் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை கற்று பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணனி பொறியியல் துறையில் பட்டத்தைப் பெற்றவராவார். மேலும் அவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான (SLEAS) பரீட்சையில் சித்தியடைந்தவருமாவார்.

சம்மாந்துறை தேசிய பாடசாலை தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை கல்வி நிருவாக சேவையின் (SLEAS) தரத்தையுடைய உத்தியோகத்தர் ஒருவரே அதிபராக கடைமையாற்ற கோரப்பட்டிருந்தது அதற்கமைய தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக  நாஸீர் அலி (SLEAS, Bsc- Uoj, PGDEA ) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கு முன்னர் சம்மாந்துறை மத்திய கல்லுாரியின் அதிபராக ஏ.சி.எம். இஸ்மாயில் அவர்கள் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe