இலங்கையில் Covid-19 அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மிக நீண்ட காலம் விடுமுறை வழங்கப்பட்டிருந்த முன்பள்ளி பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு உலக வங்கியின் நிதித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் கை கழுவுவதற்காக Hand Wash Basin with Stand , உடல் வெப்பநிலையை அளவிட பயன்படும் Thermometer போன்ற பெறுமதியான உபகரணங்கள் இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டதோடு பாலர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கின்ற போது கவனம் செலுத்த வேண்டிய சுகாதார விடயங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றினையும் Early Childhood Development Officer (முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்) RM இம்டாட் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் முன்பள்ளி சிறார்களை Covid 19 வைரஸில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்பன MOH அவர்களினால் தெளிவாக வழங்கப்பட்டதுடன் Covid-19 க்கு பின்னர் ஏற்பட்ட உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது மற்றும் அதனை எவ்வாறு கையாழ்வது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களும் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டது.