Ads Area

கல்முனை பிரதேச செயலக புதிய வாகன தரிப்பிடம் திறந்து வைப்பு.

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக முறையான வாகன தரிப்பிடம் இல்லாமல் காணப்பட்டது இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீரின் ஆலோசனையின் பேரில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லாவின் முழு முயற்சியால் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் வாகனங்களை முறையாக தரித்து வைப்பதற்கான புதிய வாகன தரிப்பிடம் இன்று(25) பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எம்.ஏ.எம் முஸ்தபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர பிரதி ஆணையாளர் எம்.ஐ பிர்னாஸ்,மாநகர சுகாதர வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.கே.எம் அர்சாத் காரியப்பர்,கணக்காளர் வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என் எம்.ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ நஜீம்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல்,பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரிகளான யூ.எல் ரமீஸ், எம்.ஹசன்,நிதி உதவியாளர் எம்.ரகுமான் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் பி.எம் பதுரூத்தீன், உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe