Ads Area

இந்த மன்சூர் தோற்றேன் என்பதற்காக இந்த கட்சியை இடைநடுவில் விட்டுவிட்டு ஓடி விடமாட்டேன்.

இந்த மன்சூர் தோற்றேன் என்பதற்காக இந்த கட்சியை இடைநடுவில் விட்டு விட்டு ஓடி விடமாட்டேன்.

தோல்வி அடைந்ததன் பின்னர் அரசியலே வேண்டாம், ஒரு கண்காணா தேசத்திற்கே சென்று விடுவோம் என முடிவெடுத்தேன். ஆனால் எனக்கு வாக்களித்த அப்பாவி மக்கள் என்னிடம் வந்து அழுகிறார்கள். வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் Call செய்து அழுகிறார்கள். நாங்கள் மிகவும் தாங்கமுடியாத வேதனையிலும் அவமானத்திலும் இருப்பதாக புலம்புகிறார்கள். இவர்களுக்கு நிச்சயம் ஓர் ஆதாரமாக நான் இருக்கவேண்டி இருக்கிறது.

பல படித்த இளைஞர்கள் எனக்காக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் அரசியல் பங்களிப்பு போதாமல் இருக்கிறது. அனைவரையும் அரசியலுக்கு அழைக்கிறேன். ஆனால் தேர்தலுக்கு மட்டும் முகம்காட்ட விரும்புவர்களை என்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் இல்லாத போதும் ஆரோக்கியமான அரசியலை செய்ய முன்வாருங்கள்.

உங்களுக்கு எதிராக உங்கள் கட்சியில் நீங்கள் வழங்கிய பதவியை வைத்துக்கொண்டு சிலர் சதி செய்கிறார்கள், அவர்களை அடித்து இழுத்து வரவா என்று எனது ஆதரவாளர்கள் கேட்டார்கள். அவர்கள் அனைவரையும் பொறுமையாக இருக்கச்சொன்னேன். இனியும் இந்த மன்சூர் வன்முறைகளை கையிலெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். தொடர்ந்தும் இருப்பேன்.

நான் MP இல்லை ஆனாலும் ஒரு ஆறுதலாய் இருப்பேன் எம்பீ இல்லை என்பதற்காக இந்த ஊரில் யாரும் சித்து விளையாட பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்.

நான் அடுத்த தேர்தல் வரை உயிரோடு இருப்பேனோ இல்லையோ அதற்கிடையில் நல்ல விசுவாசமான இளம் தலைமுறையிடம் விட்டிச்செல்ல அழைக்கிறேன்..

ஹரீஸும் பைசால் காசிமும் எம்பீ ஆவதில் எந்த கவலையோ பொறாமையோ எனக்கில்லை. ஆனால் 6,7 மற்றும் 6,9 இப்படியாக சம்மாந்துறையில் போஸ்டர் ஒட்டியவர்கள் ஏன் அவர்களது ஊரில் ஒட்டவில்லை.

நான் எதிர்பார்த்திருந்த பலர் இடைநடுவில் விட்டுச்சென்றுள்ளனர் விசுவாசமாய் இந்த சமூகத்தை கட்சியை நேசிக்க கூடிய ஆளுமை மிக்க நல்ல பண்பான படித்த,பாமர இளைஞர் சமூகத்தை அழைக்கிறேன்..

இந்த கட்சி நமக்காக வேண்டும்..

இந்த கட்சியையையும் தலைமையையும் நேசிக்கும் போராளிகளே, நான் பதவிக்காக இந்த கட்சியில் சேர்ந்தவனில்லை. ஒரு சாதாரண அடிமட்ட தொண்டனாய் சேர்ந்து தொண்டனாகவே தொடர்ந்து செயற்பட ஆசைப்பட்டவன்..

2004 இல் கட்சியை விட்டு விலகி ஓடிய அதாவுல்லா, பொத்துவில் தேசிய பட்டியல் எம்பி, சம்மாந்துறை மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் சென்ற போது 
இந்த கட்சியில் போட்டியிட இந்த மண்ணில் யாரும் முன்வராத போது தலைவர் நேரடியாக அம்பாரையில் போட்டியிட்ட போது சம்மாந்துறையில் அதிக பலம், அதிகாரம் கொண்ட பாதுகாப்பு அமைச்சின் இணைப்பாளராய் இருந்த அன்வர் இஸ்மாயிலை சமாளிக்க வேட்பாளர் நவ்சாட் க்கு துணையாக போடப்பட்ட வேட்பாளர் நான்..

தலைவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்த இடத்தில் நவ்சாட் எம்பீ ஆனார் 3 வருடம் நிறைவில் அவரும் கட்சி மாறினார் நான் அதே இடத்தில் அன்றும் இன்றும் என்றும்...

அதன் பின் தலைவரால் வேட்பாளராய் அடுத்த தேர்தலில் நியமிக்கப்பட்டேன். இப்படி இந்த கட்சி தலை நிமிரவும் தலைவன் வெற்றி பெறவும் அன்வர் இஸ்மாயிலை முகம்கொண்டு 18 வழக்குகளை சந்தித்து இன்று விடுதலையாகியுள்ளேன் அடாவடிக்காரணாய் பேரும் பெற்று..

இடையில் பதவிக்காய் வந்த பலர் கட்சியை விட்டு சென்றனர், இப்படி பல விடையங்களை கூறி வாக்களித்த, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறியதோடு..

புத்தம்புது மாற்றத்தை நோக்கி அழைப்பும் விடுத்தார். ஒவ்வொரு பகுதிக்குமுரிய செயற்குழுவை புதுப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

தோற்றுவிட்டேன் என்பதற்காக ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. கவலைப்படவும் மாட்டேன். ஆனால் ஒரு எம்பீ இல்லாததன் விளைவை ஒருவேளை எல்லாரும் உணரமுடியாமல் இருக்கலாம்.அதன் பாரதூரம் மிகக்கொடூரமானது. எந்தளவுக்கென்றால் வைத்தியர் கொடுத்த மருந்தைக்கூட வாங்க முடியாமல் பணமின்றி பலநூறு பேர் வருவார்கள். இவர்களுக்கெல்லாம் வெளிப்படையாக தெரிகின்ற ஆதரவு ஓர் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இனி இந்த ஏழை மக்களுக்கு எப்படி பதில் சொல்லப்போகிறோம்.

Rizvi Aliyar Meerasahibu
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe