அமெரிக்காவில் இருந்து வந்த கணவனை, கொரோனா அச்சத்தால் வீட்டுக்குள் விடாமல் அவரது மனைவி பல மணி நேரம் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை பூர்வீகமாக கொண்ட பாஸ்கரன் என்பவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கிருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தனது வீடு அமைந்துள்ள கேரள மாநிலம் வெள்ளிமலைக்கு சென்றுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வீட்டின் கதவை திறக்க கூறியுள்ளார் பாஸ்கரன். பாஸ்கரனுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தால், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமலும், கதவை திறக்காமலும் இருந்துள்ளனர். தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஸ்கரன் விளக்கம் அளித்தும், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் பலமணி நேரம் வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந்தார் பாஸ்கரன்.
பின்னர் பாஸ்கரன், வீட்டிற்குள் இருக்கும் காரை கொடுத்தால், அதன் மூலம் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுவிடுகிறேன் என கெஞ்சியுள்ளார். அதற்கும் அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி இறுதியில் அப்பகுதி மக்களின் முயற்சியால் வீட்டின் கேட்டை உடைத்து காரை எடுத்துக்கொண்டு மதுரைக்கு கிளம்பியுள்ளார் பாஸ்கரன். கொரோனா அச்சம், மக்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அமெரிக்காவில் இருந்து வந்த கணவனை, கொரோனா அச்சத்தால் வீட்டுக்குள் விடாமல் அவரது மனைவி பல மணி நேரம் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை பூர்வீகமாக கொண்ட பாஸ்கரன் என்பவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கிருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தனது வீடு அமைந்துள்ள கேரள மாநிலம் வெள்ளிமலைக்கு சென்றுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வீட்டின் கதவை திறக்க கூறியுள்ளார் பாஸ்கரன். பாஸ்கரனுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தால், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமலும், கதவை திறக்காமலும் இருந்துள்ளனர். தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஸ்கரன் விளக்கம் அளித்தும், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் பலமணி நேரம் வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந்தார் பாஸ்கரன்.
பின்னர் பாஸ்கரன், வீட்டிற்குள் இருக்கும் காரை கொடுத்தால், அதன் மூலம் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுவிடுகிறேன் என கெஞ்சியுள்ளார். அதற்கும் அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி இறுதியில் அப்பகுதி மக்களின் முயற்சியால் வீட்டின் கேட்டை உடைத்து காரை எடுத்துக்கொண்டு மதுரைக்கு கிளம்பியுள்ளார் பாஸ்கரன். கொரோனா அச்சம், மக்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.