சவுதி அரேபியாவில் ஜெட்டாவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தூதரகம் எதிர்வரும் 25 ம் தேதி வரை மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கடந்த 13 ம் திகதி மூடப்பட்டது.
இந்நிலையில் தூதரக அலுவலகம் மீண்டும் எதிர்வரும் 25 ம் திகதியே திறக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.