கொவிட் -19 பரவல் காரணமாக சம்மாந்துறை பிரதேச சபையின் பாராமரிப்பின் கீழுள்ள சிறுவர் பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இவ்சிறுவர் பூங்காக்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதார துறையினரின் நிபந்தனைகளுக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக இன்று வெள்ளிக்கிழமை மீளத் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக அமீர் அலி சிறுவர் பூங்கா சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.எஸ்.நிலுவ்பா, எம்.எஸ்.சரீபா ஆகியோர்களினால் மீளத் திறந்து வைக்கப்பட்டது.