Science Advances என்ற பத்திரிகையில் ஆய்வு தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள வறண்ட ஏரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஏரி காணப்பட்டதால், அதிக அளவிலான மனிதர்கள் மற்றும் விலங்குகள் வந்திருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.
ஒட்டகம், எருமை, யானை உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காக மனிதர்கள் இங்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 தடங்கள் மனிதனுடையது என கண்டறியப்பட்டுள்ளது. அதில் சில கால்தடங்கள் அளவில் வேறுபடுகின்றன. அதுபோல் அதிக இடைவெளியுடன் காணப்படுகின்றன. இதனை வைத்து பார்க்கையில், இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து நடந்திருக்கலாம் என கணித்துள்ளனர்.
வேட்டையாட பயன்படுத்தியதற்கான ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதனின் காலடி தடம் மட்டுமல்லாமல் மேலும் 233 தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் இருந்து யுரேசியாவுக்கு சென்ற மக்கள் நீர் ஆதாரத்தை தேடி, சவுதி அரேபியாவுக்கு வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa