இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை கொன்றார்கள். பின்னர் இறந்த மாட்டின் தோலை உரித்தவர்களை தாக்கினார்கள், இப்போது அவர்கள் மாட்டு தோலில் செய்யப்பட்ட பொருள்களை உபயோக்கிப்பவர்களை விட்டு வைக்கவில்லை அந்தளவுக்கு இந்தியாவில் மாட்டரசியல் பேசு பொருளாக மாறியிருந்தமையினையும் இருக்கின்றமையினையும் நாம் அறிவோம்.
இன்று இலங்கையிலும் மாட்டரசியல் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்பட இன்னும் பல பேரின அரசியல்வாதிகள் பசு நேசர்களாக மாறி அவர்களின் பார்வை தற்போது மாட்டிறைச்சி மீது விழுந்திருக்கிறது. மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான யோசனையை ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்துள்ள செய்திகள் தற்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. (பேசுறதெல்லாம் யாரு..?? நம்மவர்கள்தான், மற்றவர்கள் சும்மாதான் இருக்கின்றார்கள்)
நல்லாட்சிக்கு முன்னர் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் அப்போது மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக இந்திர ரத்ன தேரர் என்ற பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாட்டரசியல் பேசவில்லை, மாடறுப்பிற்கு எதிராகவும் எந்தவித நடவடிக்கையினையும் அவர் அன்று எடுத்திருக்கவில்லை.
நிற்க,
தற்போது பொதுஜன பெரமுன கட்சியினுாடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டு மீண்டும் ஆட்சிபீடமேறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மாட்டரசியல் பரவ ஆரம்பித்துள்ளது. மாடறுப்பு விடையத்தில் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருந்த அதே நிலைப்பாட்டை தற்போது பிரதர் மஹிந்த ராஜபக்ஷவும் கொண்டிருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையைில் ஒரு விடையம் கவனிக்கத்தக்கதாக உள்ளது அதாவது இலங்கையி்ல் மாடறுப்புக்கே தடை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர இந்தியாவைப் போன்று மாட்டிறைச்சி உண்பதற்கு தடை என்ற யோசனை முன்வைக்கப்படவில்லை மாட்டிறைச்சியினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உண்ணலாம் என்ற அடிப்படையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நமது நாட்டிலேயே மாட்டுவளம் ஏராளமாக இருக்கும் போது ஏன் வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற கேள்விதான் பலரிடம் இருந்து வருகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் இலங்கையில் மாடுகளை அறுப்பதற்கு தடை விதித்து இறைச்சியினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதானது நாட்டுக்கும், நாட்டு வளத்திற்கும், பொருளாதார வளத்திற்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகமாகவே அமையும். நமது நாட்டில் தேவைக்கு அதிகமான அளவுகளில் மாடுகள் இருக்கும் போது மாட்டிறைச்சியினை இறக்குமதி செய்வதானது அதிக செலவினத்தையும், நஷ்டத்தையும், தேவையில்லாத விலையுயர்வையுமல்லவா ஏற்படுத்தப்ப போகின்றது. மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் இலங்கையில் இப்போது இருக்கும் விலையை விட அதிக விலை கொடுத்தே மாமிசத்தை வாங்கும் நிலை ஏற்படும். உள்நாட்டில் தாராளமான வளம் இருக்கும் போது, வெளிநாட்டிலிருந்து ஒன்றை இறக்குமதி செய்து கூடிய விலைக்கு அதை மக்களுக்கு கொடுப்பது நல்லதொரு அரசின் பணியாக ஒரு போதும் இருக்காது!
வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் பழைய பதப்படுத்தப்பட்ட இறைச்சியையே மக்கள் தொடர்ச்சியாக உண்ண நேரிடும். நாட்டிலே இதற்கு நல்ல வளம் இருக்கும் போது பதப்படுத்தப்பட்ட பழைய இறைச்சியை நாட்டு மக்களுக்கு வழங்கும் போது பாரிய சுகாதாரப் பிரச்சினையினை நாட்டு மக்கள் சந்திக்க நேரிடும். வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் ஹலால் முறையில் அறுக்கப்பட்டதுதானா? என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்படும். இந்த நிலைமை இறைச்சி விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதையும் ஒருபுறம் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது பரவியுள்ள மாட்டரசியல் விடையத்தை வலது-இடது-முன்-பின்-யூட்டேன் என எந்தத் திசையில் நோக்கிப் பார்த்தாலும் இனவாதிகளை திருப்திப்படுத்துதல், ஏற்றுமதி-இறக்குமதி மூலம் வியாபார வியூகம் அமைத்தல் என்ற விடையங்களே லைட்டா புலப்படுகிறது.
அன்சார்
சம்மாந்துறை.