Ads Area

புடவையில் ஊஞ்சல்கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு.

சென்னை அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி, இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மகன் பாலாஜி, 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேர்று மாலை ரகுபதி மனைவியுடன் கடைக்கு சென்றிருக்கிறார். வீட்டில் மகன் பாலாஜி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவர் பார்த்துள்ளார். அப்போது சிறுவன் பாலாஜி தொட்டிலில் கட்டிய புடவை கழுத்து இறுகி மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe