Ads Area

கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் –இம்ரான் எம்.பி

கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரைக் கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதங்களின் பிரதிகள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இக்கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிண்ணியா தள வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையின் வேறு எந்த வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படாத இந்த நேரக்குறைப்பை நிறுத்தி வழமைபோன்று வெளிநோயளர் பிரிவு செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல நடுஊற்று வைத்தியசாலையில் கடந்த 1 மாத காலமாக வைத்தியர் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் இவ்வைத்தியசாலையை சூழவுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வைத்திய சேவைக்காக மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் இவ்வைத்தியசாலைக்கு பகுதி நேர அடிப்படையிலாவது வைத்தியர் ஒருவர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறே நடுத்தீவு வைத்தியசாலைக்கும் நிரந்தர வைத்திய நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe