இந்தியாவின் ஓசூர் அருகே ஆடு மேய்க்கும் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே கப்பக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மா (வயது 62). கணவரை இழந்த இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் அப்பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலைகளின் தேவையற்ற பொருட்களை எடுத்துச்சென்று உள்ளார். அவர் தனியாக செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை இறுக்கி படுகொலை செய்துள்ளனர்.
மேலும் அவர் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க செயின், கம்மலை பறித்துச் சென்றுள்ளனர். வெளியில் சென்ற அம்மா திரும்பி வராததைக் கண்ட அவருடைய மகன் சம்பங்கி ராமய்யா, நஞ்சம்மாவை தேடிச் சென்றுள்ளார். அப்போது வயல் பகுதிகளில் கொலை செய்யப்படு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பங்கி ராமைய்யா மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.