Ads Area

30 வருடமாக பிச்சையெடுத்து சம்பாதித் கோடீஸ்வர நபரை கைது செய்த பொலிசார் !

எகிப்து நாட்டை சேர்ந்த மூதாட்டி நபிஷா. தற்போது இவருக்கு வயது 57. இவர் 30 வருடமாக பிச்சை எடுத்து வந்துள்ளார். தனது 27-வது வயதில் கணவரை பிரிந்த பின்னர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியுள்ளார் நபிஷா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபீஷாவின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அடேங்கப்பா என ஆச்சர்யப்படும் அளவிற்கு நபீஷாவின் கதை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனால் கை விடப்பட்ட பின்னர் 30 வருடமாக பிச்சை எடுத்து வைத்துள்ள பணத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளார். அதன் மதிப்பு  எகிப்தியன் பவுன் 3 மில்லியன்களாகும் மேலும் 5 மாடி வீடு வைத்துள்ளார். அதனை வாடகைக்கும் விட்டு சம்பாதித்து வருகின்றார். ஆனாலும் தெருவில் பிச்சை எடுப்பதை கைவிட வில்லை.

நபிஷா கடந்த 10 ஆண்டுகளாக வீல்சேரில் அமர்ந்தே பிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் அவரது கால்கள் நல்ல நிலையில் உள்ளது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீல்சேரில் அமர்ந்து பிச்சையெடுத்தால் வருமானம் நல்ல வருவதாகவும், ஒரு முறை காலில் ஏற்பட்ட காயத்தால் வீல்சேர் பயன்படுத்தி வந்ததும், அந்த சமயம் வருமானம் அதிகமாக கிட்டியதால் அப்படியே பிச்சை எடுப்பதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

செய்தி  மூலம் - https://webeenow.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe