செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்த இளைஞருக்கே இச்சோக சம்பவம் நடந்துள்ளது. கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த சஞ்சய், ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் சார்ஜ் போட்டுக் கொண்டு நண்பரிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எதிர் பாராதவிதமாக செல்போனில் மின்சாரம் பாய்ந்து சஞ்சய் துடிதுடித்துக் கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களோ அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் பிரேத பரிசோதனை செய்யாமல் இளைஞரின் சொந்த ஊரான பெரம்பலூருக்கு உடலை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் சஞ்சயின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.