பஹ்ரைனின் தேசிய, பாஸ்போர்ட் மற்றும் வதிவிட விவகாரங்கள் (NPRA) அமைப்பானது அனைத்து சுற்றுலாவாசிகளுக்கும் கட்டணம் ஏதுமின்றி அடுத்த வருடம் (2021) ஜனவரி 21 வரை அனைத்து வகையான விசிட் விசாக்களின் செல்லுபடியையும் மீண்டும் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இ-விசா வலைத்தளத்தின் மூலம் விசா புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமின்றி NPRA தானாகவே விசா நீட்டிப்பு செயல்முறையை மேற்கொள்ளும் என்றும் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் விளைவாக ஏற்படும் அசாதாரண உலகளாவிய சூழ்நிலை காரணமாக சுற்றுலாவாசிகள் நாட்டில் தங்குமிட நிலைமையை சரிசெய்யவும், தங்கள் நாடுகளுக்கு விமானங்கள் கிடைத்தால் அவர்கள் புறப்படுவதற்கும் ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் ஆதரவளிக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபப்ட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்து தொற்றுநோய்க்கு எதிரான தேசிய முயற்சிகளின் ஒரு பகுதியாக மனிதாபிமான காரணங்களுக்காக நிர்வாகக் கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையின்றி பஹ்ரைனில் உள்ள வெளிநாட்டினரை ஆதரிக்கும் வண்ணம் அவர்களின் ரெசிடென்ஸ் அனுமதி மற்றும் விசாக்களின் செல்லுபடியை அந்நாட்டு அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
Thanks - Khaleej Tamil.