தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் உள்ள உணவுப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் சவுதி அரேபியாவில் வருடமொன்றுக்கு 400 பில்லியன் சவுதி றியால்கள் பெறுமதியான உணவுகள் வீணாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மக்கா மற்றும் ரியாத் நகரங்களில்தான் அதிகளவான உணவுகள் வீணாக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வீணாக்கப்படும் உணவுகளில் அரசி வகை உணவுகள் குறிப்பாக கப்சா போன்றவைகள்தான் முன்னிலை வகிக்கின்றன அதே போல் ரொட்டி வகைகள் மற்றும் பேரீச்சம் பழங்கள் போன்ற உணவு வகைகளும் அதிகளவாக வீணாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.