சீனாவிலுள்ள வடகிழக்கு பிராந்தியமான ஹீலாங்ஜியோங் பகுதியில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாகப் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்தவர்கள், சோள மாவில் தாமே தயாரித்த நூடுல்ஸை, ஒரு வருடமாக குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நூடில்ஸை குறித்த குடும்பத்தினர் எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
நூடில்ஸை சாப்பிட்ட சில மணி நேரத்தில் அவர்கள் அனைவருக்கும், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். எனினும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரிதாபமாகப் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, சோள மாவால் செய்யப்பட்ட நூடில்ஸை நீண்ட காலம் கழித்து சாப்பிட்டதால், அதில் ஏற்பட்டிருந்த இரசாயன மாற்றம் உடலில் நச்சுத்தன்மையாக சென்று மரணத்தை தந்துள்ளமை கண்டறியப்பட்டது.