(எம்.என்.எம்.அப்ராஸ்)
தேசிய டெங்கு ஒழிப்பு வார்ததை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது இதற்கமைய கல்முனை பகுதிகளில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் ஜி .சுகுணன்அவர்களின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ. றிஸ்னி அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை கிரீன்ஃபீல்ட் குடியிருப்பு பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி (18) இடம்பெற்றது.
கல்முனை தெற்கு சுகாதார பணிமனை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோர்ஒன்றிணைந்து இவ் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
மேலும் இதன் போது
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ.றிஸ்னி அவர்களினால் டெங்கு நோய் பரவும் வழிமுறைகள் இதனை நாம் எவ்வாறு கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பொது மக்கள் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி இங்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.
பொது மக்கள் அதிகாரிகள் ஒன்றினைந்து சுற்று புறத்தில் காணப்பட்ட கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டடு சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன்
மேலும் சிரமதான பணியானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றதுடன் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் இவ் சிரமதான பணியை மேற்கொள்ள வருகை தந்ததை காணக்கூடியதாகவிருந்தது.