தகவல் - சம்மாந்துறை அன்சார்.
பாக்கிஸ்தான் நாட்டு சர்வதேச ஏர்லைன்ஸ் (A Pakistan International Airlines PIA) இல் விமானப் பணிப்பெண்னாக கடமையாற்றி வந்த புஷ்ரா சலீம் என்ற விமானப் பணிப்பெண்ணின் நேர்மையினைப் பாராட்டி பாக்கிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (A Pakistan International Airlines PIA) நிறுவன தலைமைப் செயல் அதிகாரி (CEO) அர்ஷாத் மாலிக் அப் பணிப்பெண்னுக்கு ஒரு இலட்சம் பாக்கிஸ்தான் ரூபாய்களை பரிசாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
டுபாயிலிருந்து பாக்கிஸ்தான் கராச்சியை நோக்கிப் பறந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் ஒரு பயணியின் இருக்கையில் 21,400 ஆயிரம் திர்ஹம் பணம் தவறவிடப்பட்டிருந்தது அதனை புஷ்ரா சலீம் என்ற விமானப் பணிப்பெண் அந்தப் பணத்தை கராச்சி விமான நிலையத்தில் ஒப்படைத்து அதனை தவறவிட்டவரிடம் ஒப்படைத்துள்ளார்.
அவரது இத்தகைய நேர்மையினைப் பாராட்டியே பாக்கிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனம் குறித்த அந்த விமானப் பணிப்பெண்னுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.