Ads Area

கத்தாரில் பங்களாதேஷ் நாட்டு ஊழியரின் மனிதநேய செயல் – பணிஉயர்வு மற்றும் பாராட்டு.!

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஹம்மது யாசின் என்பவர் கத்தாரில் உள்ள Talabat உணவு விநியோக நிறுவனத்தில் Delivery Boy-யாக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன், பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக சக்கர நாற்காலியில் சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உதவி செய்த சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து முஹம்மது யாசின் காணொளி ஒன்றில் கூறுகையில், நான் ஆர்டர் ஒன்றை பெற்றுக்கொண்டு வழங்க சென்றிருந்தேன்.

அந்த நபர் யார், எங்கிருந்து வந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. சக்கர நாற்காலியில் சாலையை கடக்க தடுமாறிக் கொண்டிருந்தார். அங்கு நிறைய ஆபத்து மற்றும் வேகமாக நகரும் போக்குவரத்துமிக்க நேரமாக இருந்தது.

இதனைக் கண்ட நான் உடனே எனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவர் எங்கு செல்ல விரும்புகிறார் என்று கேட்டேன். அவர் சாலையின் முடிவை நோக்கி சுட்டிக்காட்டினார், நான் அவருக்கு சாலையை கடக்க உதவினேன். பின்னர்,  எனக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Talabat-ல் பணியுரியும் முஹம்மது யாசின் செய்த உதவியை அந்த சாலை வழியாக பயணித்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாக பரவியது.

இதனைத்தொடர்ந்து, கத்தார் உள்துறை அமைச்சகத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் செய்த செயலுக்கு அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், எனக்கு பரிசாக தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் காலணிகளைக் கொடுத்தார்கள் என்றார்.

இதுமட்டுமல்லாமல், அவர் பணியுரியும் நிறுவனமான Talabat அவரை பாராட்டி, அவருக்கு பணி உயர்வும் வழங்கியுள்ளது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe