சவுதி அரேபியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த வைத்தியர்கள், தாதிகள் என மருத்துவ ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் சவுதி ரியால்களை உதவித் தொகையாக வழங்க சவுதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சவுதி அரேபியா அமைச்சு இதற்கான அனுமதியினையும் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 2ம் திகதிக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமான அனைத்து மருத்துவ ஊழியர்களினதும் குடும்பத்தினருக்கு இவ் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. சவுதி நாட்டைச் சேர்ந்த வைத்திய ஊழியர்கள் மற்றும் சவுதியில் பணிபுரிந்த வெளிநாட்டு வைத்தியர்கள் என அனைவரும் இவ் உதவித் தொகை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://lifeinsaudiarabia.net
தமிழில் - சம்மாந்துறை அன்சார்