Ads Area

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் மீட்பு.

பாறுக் ஷிஹான்.

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாகக் கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதுபானப் போத்தல்கள் மோட்டார் சைக்கிளொன்றினூடாகக் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ரம்ஷீன் பக்கீருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினைத் தொடர்ந்து வியாழக்கிழமை (29) வீதி ரோந்து நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது, பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் சுமார் 35 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்கள் 58 மதுபானப் போத்தல்களை சூட்சுமமாக மறைத்து எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் 2 சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் 58 மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மதுபானப் போத்தல்கள் சுமார் பல இலட்சம் பெறுமதியானவை எனவும், அளவிற்கதிமான மதுபானப் போத்ததல்களை சட்டவிரோதமாகப் பதுக்கிக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைதான இரு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe