Ads Area

சவுதி அரேபியாவில் யாராவது மரம் மற்றும் செடிகளை வெட்டினால் 10 வருடம் சிறைத் தண்டனை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் யாராவது மரம் ஒன்றினையோ அல்லது கிளை, செடிகளையோ வெட்டினால் அவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை மற்றும் 30,000,000 மில்லியன் (30M) சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரங்களை வெட்டுவது, கிளைகளை அகற்றுவது, மரத்தின் பட்டைகளை உரிப்பது, மரத்தின் அடி மண்ணை கிளருவது போன்ற மரத்தின் அல்லது செடி, கொடிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடும் சவுதி அரேபியாவின் சுற்றுச் சூழல் சட்டத்தின் பிரகாரம் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.

சவுதி அரேபியாவில் தற்போது 2030 என்ற திட்டத்தின் ஊடாக 10 மில்லியன் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது கடந்த மாதம் சவுதி அரேபியாவின் சுற்றாடல் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் ஃபாட்லி (Abdul Rahman Al Fadley) இதனை அறிவித்திருந்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe