சம்மாந்துறை பிரதேச சபையின் 33ஆவது மாதாந்த அமர்வு தவிசாளர் கெளரவ ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் சம்மாந்துறை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது.
இதன்போது வரவு செலவு திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில் தவிசாளர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் அன்றைய அமர்வில் கலந்து கொண்டனர்.