தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் பணிபுரியும் 60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினரின் வேலைக்கான ஒப்பந்தம் (work permit) மற்றும் அவர்களின் குடியிருப்பாளர் அடையாள அட்டை (Iqama) ஆகியவை இனிமேல் புதுப்பிக்கப்படாது என குவைத் தெரிவித்துள்ளது. எதிர் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் இச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு இகாமா மற்றும் வேலை ஒப்பந்தம் புதிப்பிக்கப்படாதவர்கள் 1 தொடக்கம் 3 மாத்திற்குல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எவ்வாறிருந்தும் இந்த சட்டமானது குவைத்தில் அரசாங்க அலுவலகங்களில் பணி செய்வோருக்கானதா அல்லது தனியார் நிறுவனங்களில் பணி செய்வோருக்கானதா அல்லது இருவருக்கும் பொருந்தக் கூடியதா என இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
குவைத் அரசாங்கம் தற்போது தங்களது நாட்டு குடிமக்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் திட்டத்தின் கீழ் இப் புதிய சட்டத்தினை அமுல்படுத்தி அதன் மூலம் வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்துவதினை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.